விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை அழகி போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர்.
இறுதியில், நடப்பாண்டுக்கான மிஸ் திருநங்கையாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
2 மற்றும் 3ஆம் இடங்களில் சென்னையைச் சேர்ந்த ஜோதா, திபாஷா ஆகியோர் தேர்வு பிடித்தனர். பின்னர், மிஸ் திருநங்கையாகத் தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.