டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரி வேட்டை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், அனுராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நரி வேட்டை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், மே 16-ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில சூழ்நிலைகள் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், மே 23-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.