ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளிக் காட்சியளித்தார். பின்னர், முக்கிய வீதியில் வலம் வந்த வரதராஜ பெருமாளுக்குப் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.
இந்த கருட சேவை நிகழ்ச்சியில், வரதராஜ பெருமாள் வேடமணிந்து பக்தர்கள் நடனமாடி வீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.