கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதியன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் சிகர நிகழ்ச்சியாக திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வருகை தந்து தாலி கட்டிக்கொண்டனர். இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அரவான் சுவாமியை பக்தர்கள் மனமுருக தரிசித்தனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்