ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐகூ நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்கள் வரும் 20-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐகூ நியோ 10 மற்றும் நியோ 10 ப்ரோ சீரிசில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் 2 K டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.