நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலைக் கிழித்து, இளம் மவோரி எம்பி ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க், பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் காட்டினார். அப்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம், நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப் பரிந்துரைத்துள்ளது.