உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை வலுப்படுத்த வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர்.
இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பியத் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
இந்த நிலையில், அதுகுறித்து பேசிய அவர், அமைதியை அடைவதற்கான முதல் படிப் போர் நிறுத்தம் என்றார். ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.