ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.