உறையூரில் பொதுக் கழிப்பிட கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காகச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்டு, கவுன்சிலர் மீது பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் உறையூரில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிட கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு சென்றார்.
அப்போது, அங்குக் கூடியிருந்த மக்கள், அமைச்சரை முற்றுகையிட்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் செய்து தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வந்த விஜயா ஜெயராஜ், பின்னர் மக்களின் குறைகளைக் கேட்க வரவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என அவர்கள் வேதனையுடன் கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.