ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ஆற்றுநீரில் ரசாயன நுரை பொங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை பெருக்கெடுத்துச் செல்கிறது. துர்நாற்றத்துடன் ஆற்றில் நுரை செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாகச் சாயக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும், இதனைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.