திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள மக்கள் மருந்தகம் கடையின் பூட்டை உடைத்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த விம்கோ நகரில் பாரத மக்கள் மருந்தக கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கடை உரிமையாளர் முரளி கிருஷ்ணன் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, கள்ளாவில் இருந்த 29 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கடையின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.