கோவை சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர்.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபரிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மழைநீர் வடிகால் அமைக்காததே தண்ணீர் தேங்க காரணமென வியாபாரிகள் குற்றம் சாட்டினர்