திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கையில் காலணியுடன் சுவாமி தரிசனம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், காவல்துறையினரின் சோதனையைத் தாண்டி, ஒருவர், தனது காலணியை பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு கோயிலில் சுவாமி தரிசினம் செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வெளிமாநிலத்திலிருந்து வரும் பக்தர்களைக் குறிவைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் கோயில் ஊழியர்கள் செயல்படுவதாகவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும், கோயில் ஆகம விதிகளை மீது காலணியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.