தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல், மின் கட்டணம் சுமார் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டது. மேலும், 2026-27-ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம், மின் கட்டணம் 2 புள்ளி 18 சதவீதம் உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலையில், மின் கட்டணம் 4 புள்ளி 83 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில், வீடுகளுக்கான கட்டண உயர்வைத் தமிழக அரசே ஏற்றது.
தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், மின்கட்டணம் 3 புள்ளி 16 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.