கனமழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மாங்கனி ஓடை ,சங்கிலி பாறை,வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நீர் வரத்தைப் பொறுத்தே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.