காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், காசாவை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோமென நெதன்யாகு கூறியுள்ளார்.