தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேரளாவில் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் வரும் 24 அல்லது 25-ம் தேதி பருவமழை தொடங்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.