இந்தியாவில் அடுத்தடுத்து களம் இறங்கும் 5 அட்வென்ச்சர் பைக்குகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களிடையே இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 தொடக்கத்தில் புதுதில்லியில் நடந்த இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தின.
அந்தவகையில், ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 750, டிவிஎஸ் RTX 300, பிஎம்டபிள்யூ F 450 GS, CFMoto 450MT, KTM 390 SMC R உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.