சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெற உள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தனது போர் விமானங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியுடன், எளிதாகக் கட்டணம் செலுத்தும் சலுகைகளையும் சீனா வழங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராகச் சீனாவின் J-10 போர் விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.