தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியிடப்படும் எனும் முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
நன்கு ஆலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய கமல்ஹாசன், இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு எனவும் கூறினார்.