இலங்கையில் இறுதிப்போர் நினைவு நாளையொட்டி 12 ஆயிரத்து 400 ராணுவத்தினர் மற்றும் வீரர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின் நினைவு நாளையொட்டி அதிபர் அநுர குமர திசநாயக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், நாட்டில் விடுதலைப் புலிகள் நடத்திய போர் ஒரு பெரும் துயரம் எனவும், அது முடிவுக்கு வந்ததன் 16-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி 12,400 ராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவத்தினருக்குப் பதவி உயர்வு அளித்ததாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.