கேடிஎம் நிறுவனமானது இந்தியாவில் விற்பனை செய்து வரும் RC 200 ஸ்போர்ட் பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது.
சமீபத்தில் தான் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் தொடக்கநிலை ஸ்போர்ட் பைக்கான RC 200-ன் விலையை உயர்த்தியது கேடிஎம்.முன்பு கருப்பு மற்றும் ப்ளூ என இரண்டு நிறங்களில் மட்டுமே RC 200 விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அத்துடன் புதிதாக, மெட்டாலிக் கிரே நிறமும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.