புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநாள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்கி, சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் கொடி மரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து ரிஷப வானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடியை, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கக் கொடி மரத்தில் ஏற்றினர்.
இதில் மாவட்ட ஆட்சியர் சோமசேகர அப்பாரவ், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட பலரும், பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.