கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கனமழை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திருவம்பாடி புன்னக்கல் சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கனமழை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மின் கம்பம் உடைந்து சாலையில் விழுந்த நிலையில், காரை பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனமும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.