ஏற்காட்டில் 48-வது கோடை விழா கண்காட்சியில் வகைப்படுத்தப்பட்ட காய்கறிகள் குறித்த தமிழ் எழுத்துக்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எழுத்து பிழையுடன் எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
இதில் தோட்டக்கலைத் துறை சார்பில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் செடிகள் வரிசை படுத்தப்பட்டு அதன் அருகிலேயே காய்கறிகள் பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவற்றின் கீழே என்ன ரகங்கள் என எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்தும் தமிழ் வார்த்தைகள் பிழைகளுடன் காணப்பட்டன.