போலாவரம் பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
அவரை பூங்கொத்து கொடுத்து நிதியமைச்சர் வரவேற்றதையடுத்து இருவரும் திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். கோதாவரி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை தெற்கு- மத்திய ஆந்திரப் பிரதேசத்தில், நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பி விடுவதே போலாவரம் பாசன திட்டத்தின் நோக்கமாகும்.