ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் முக்கிய மாவோயிஸ்டு தலைவரான பப்பு லொஹாரா மற்றும் பிரபத் கஞ்சு ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும், மாவோயிஸ்டு இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் காயத்துடன் பிடிபட்டுள்ள நிலையில், 24 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட பப்பு லொஹாரா-வின் தலைக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியும், பிரபத் கஞ்சு தலைக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதியும் பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.