வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருமான வரி தாக்கல் படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐடிஆர் படிவங்கள், சிஸ்டம் மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் டிடிஎஸ் கிரெடிட் பிரதிபலிப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வர சில காலம் தேவைப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலமாக சம்பளதாரர்கள் அவசரம் இன்றி முறையாக திட்டமிட்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.