நெல்லை மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்-மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பிராதன அணையான காரையார் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 506 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் 143 அடி மொத்த கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 103.9 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, அங்குள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 17 அடி வரை உயர்ந்து 135.17 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.