இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய இணை அமைச்சரும் அன்பு சகோதரருமான எல்.முருகனுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும் நலமும் பெற்று, மக்கள் நலப் பணியை மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.