மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டதாக இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான சர்மிஷ்டா பனோலி என்பவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.
இவர் கடந்த மே 14-ம் தேதி வெளியிட்ட அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காத்ததை விமர்சித்ததுடன், வகுப்புவாத கருத்துக்களும் உள்ளடங்கியிருந்தன.
அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டச்சு நாடாளுமன்ற உறுப்பினரும், அந்நாட்டின் வலதுசாரி சுதந்திரக் கட்சியின் தலைவருமான கீர்ட் வைல்டர்ஸ் என்பவர், சர்மிஷ்டா பனோலி கைதை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சர்மிஷ்டா பனோலியின் கைது, பேச்சு சுதந்திரத்திற்கு அவமானம் எனப் பதிவிட்டுள்ளார்.