பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான விரோத போக்கை நிறுத்துவதற்கு உதவியதற்காக ட்ரம்ப் புகழ் பெறத் தகுதியானவர் எனும் பிலாவல் பூட்டோவின் கருத்தை ஆமோதிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதுப்பிக்கப்பட்ட நட்புறவில் நுழைகின்றன எனவும் ஷெபாஷ் ஷெரீப் கூறினார்.