கனமழை காரணமாக அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 85 அடியை எட்டியுள்ளது.
தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் அமராவதி ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
















