திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் பெரும் படையைத் திரட்டி கோயிலை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது குறித்து பேசியவர்,
தமிழன் சாதி, மதத்தால் பிரிந்து கிடக்கிறான், சாராயத்தால் வீழ்ந்து கிடக்கிறான் என்றும் தமிழுக்கும், திமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கல்வெட்டில் தமிழ் பொறிக்கப்படாதது பற்றி திமுக குரல் எழுப்பவில்லை என்றும் தமிழ்க்கடவுளான முருகனின் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் தமிழில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் கோயிலை முற்றுகையிடுவோம் என்று சீமான் தெரிவித்தார்.