ஈரான் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதில் பாகிஸ்தானின் சதி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூன் 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி உட்பட சில முக்கிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் முகமது பகேரியை சந்தித்ததாகவும், அப்போது அவர் பகேரிக்கு ஜிபிஎஸ் கருவி கொண்ட கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதன் மூலமே முகமது பகேரியின் இருப்பிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
















