பெரு நாட்டில் 6 புள்ளி ஒன்று ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு தெருவில் தஞ்சம் அடைந்தனர்.
லிமா பகுதியில் கார் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிலநடுக்கம் காரணமாகப் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
















