பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேட்டக் 3001 என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல் இந்திய சந்தையில் 99,990 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 127 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வழங்கப்படும் 750 W சார்ஜர், பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை 3 மணி நேரம் 50நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.