திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அக்ஷயா, போளுர் அத்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அக்ஷயாவுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு காமேஷ் மறுத்ததால் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த நிலையில், அக்ஷயாவுக்கு மது என்ற திருநங்கையோடு நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தையைத் தான் வளர்ப்பதாக அக்ஷயாவிடம் மது கூறியுள்ளார். ஆனால் குழந்தையைக் கொடுக்க அக்ஷயா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மது, குழந்தையைக் கடத்தி 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அக்ஷயா புகாரளித்த நிலையில், திருநங்கை மதுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.