திருப்பூர் மாவட்டம், கொடுவாயில் பஜ்ஜிக்கு வெங்காயம் தராததால் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுவாயை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகனான சித்தேஸ், தந்தைக்கு உதவியாக அங்கு பணியில் ஈடுபடுவார்.
ரமேஷின் பேக்கரிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், பஜ்ஜிக்கு வெங்காயம் கேட்ட நிலையில் சித்தேஸ் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சித்தேரி தாக்கியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.