குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாகக் கூறியுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு , சட்டத்தை மீறினால் கிரீன் கார்டுகள் மற்றும் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று குடியேறிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், நிரந்தரக் குடியுரிமை என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை என்று விளக்கமளித்துள்ளது.