தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அதிமுக வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் எனக் கூறினார்.
கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை ஒழிக்க வேண்டும் எனவும் இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்க அயராது உழைக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
















