தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் சடலத்தை, பாலத்தைக் கடந்து கொண்டு செல்ல முடியாததால், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள அரசபத்து கால்வாயைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட பாலம், கடந்தாண்டு பெய்த கனமழையால் சேதமடைந்தது.
இந்நிலையில், பாலத்தை இதுவரை சீரமைக்காததால், சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சடலத்தைக் கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.