சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 90 சவரன் தங்க நகையை மீட்டுக் கொடுத்த தனிப்படை காவலர்களுக்குத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிட்லபாக்கம் பகுதியில் வசிக்கும் மாலினி என்பவரது வீட்டில் 90 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.
இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையனைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆரோக்கியதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகையையும் மீட்டனர். ஒரு மாதத்திற்குள் திருடப்பட்ட நகையை மீட்டு, கொள்ளையனைக் கைது செய்த காவல்துறைக்குத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.