மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் அமைந்துள்ள ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புந்தேல்கண்டில் உள்ள ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோயில் படிக்கட்டுகள் வழியாக வெள்ளநீர் அருவிபோல் கொட்டியது. கோயில் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளித்ததால் பக்தர்கள் வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.