தஞ்சை அருகே அனுமதி இல்லாத வழித்தடத்தில் அதிவேகமாகச் சென்ற மினி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
தஞ்சை மணிமண்டபம் அருகே குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி பகுதியில் பர்மிட் இல்லாத வழித்தடத்தில் மினி பேருந்துகளை இயக்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில் கல்லூரி மாணவிகளை ஏற்றுவதற்காக அனுமதி இல்லாத வழித்தடத்தில் வேகமாக வந்த மினி பேருந்து, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பூதலூரை சேர்ந்த அன்பானந்தன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.