வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை அமைப்பின் நீதிபதி முகமது குலாம் மோர்டுஜா மஜும்தர் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதில், ஹசீனாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதே வழக்கில் கோபிந்தகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஷகீல் என்பவருக்கு 2 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.