தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, முன்னாள் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சாக்கோட்டை – கருப்பூர் இடையே உள்ள பகுதிகளில் மட்டும் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.