அமெரிக்கா அப்பாச்சி ஹெலிகாப்டர்களை, இம்மாத இறுதிக்குள் இந்திய ராணுவத்திற்கு வழங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலருக்கு அப்பாச்சி ஏ.ஹெச்.64இ அட்டாக் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.
கடந்த ஆண்டு ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு கட்டங்களாக ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடையும் என்றும், பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பிற்காக இந்த ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.