அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய ஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாகச் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறை தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கைத் தாமாக முன் வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணைய புலன் விசாரணை ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளது.