போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!
Jul 4, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் செய்தது போதாதா? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தில், தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷான் அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும், தமிழகப் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய உணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிறக்கும் காலத்தில், அவர்களின் ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு, நமது பாரதப் பிரதமர் மோடியால், கொண்டு வரப்பட்ட திட்டம் போஷன் அபியான்.

நம் குழந்தைகள் பசியின்றிக் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கர்மவீரர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பட்டு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் மேம்படுத்தப்பட்ட திட்டம் மதிய உணவுத் திட்டம்.

அதற்கான நிதியில் ஒரு பங்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, நம் கர்ப்பிணி சகோதரிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

போஷான் அபியான் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 2023 – 2024 ஆண்டு ₹398.52 கோடி. சென்ற 2024 – 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கிய தொகை ₹324.2 கோடி. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் செய்தது போதாதா? ஒட்டு மொத்த நிதியையுமே முடக்கும் திட்டமா? என்று கேள்வி எழுப்பியவர், உடனடியாக, போஷான் அபியான் திட்ட ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் மதிய உணவுக்கான பொருள்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: அண்ணாமலை கேள்விWhere does all the money provided for the Poshan Abhiyan project go?: Annamalai Questionபோஷான் அபியான்
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

Next Post

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Related News

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

“மார்கன்” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

கூமாபட்டி போல் இணையத்தில் வைரலாகும் குருவித்துறை!

திண்டுக்கல் அருகே பாஜக முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் கொலை – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!

சேலம் : திமுகவினர் அராஜகம் – தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies